பாண்லே உற்பத்தித் திறனை 20 ஆயிரம் லிட்டராக உயர்த்த ஒப்பந்தம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்து


பாண்லே உற்பத்தித் திறனை 20 ஆயிரம் லிட்டராக உயர்த்த ஒப்பந்தம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்து
x
தினத்தந்தி 31 July 2021 1:09 AM GMT (Updated: 31 July 2021 1:09 AM GMT)

பாண்லே உற்பத்தித் திறனை 20 ஆயிரம் லிட்டராக உயர்த்த ஒப்பந்தம்: முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் கையெழுத்தானது.

பாண்லே நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மதிப்பூட்டப்பட்ட பால் பொருட்களை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் அமுல் ஐஸ்கிரீம் வகைகளையும் பாண்லேவில் உற்பத்தி செய்து தென்னிந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. அதன் உற்பத்தி திறனை 10 ஆயிரம் லிட்டரில் இருந்து 20 ஆயிரம் லிட்டராக உயர்த்த தேசிய பால்வள வாரியத்துடன் தொழில்நுட்ப மற்றும் கட்டுமான ஒப்பந்தம் ரூ.13 கோடியில் நேற்று கையெழுத்தானது. முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 

நிகழ்ச்சியில் தேசிய பால்வள வாரிய மண்டல தலைவர் ராஜீவ், அலுவலர் வினாயகம், புதுவை கூட்டுறவு பதிவாளர் முகமது மன்சூர், பால்வள அபிவிருத்தி அதிகாரி குமாரவேல், பாண்லே மேலாண் இயக்குனர் சுதாகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story