மத்திய பிரதேசத்தில் 150 ஆண்டு பழமையான சிறை இடிந்ததில் 22 கைதிகள் காயம்


மத்திய பிரதேசத்தில் 150 ஆண்டு பழமையான சிறை இடிந்ததில் 22 கைதிகள் காயம்
x
தினத்தந்தி 31 July 2021 4:52 AM GMT (Updated: 2021-07-31T10:22:42+05:30)

மத்திய பிரதேசத்தில் 150 ஆண்டு பழமையான சிறை இடிந்து விழுந்ததில் 22 கைதிகள் காயம் அடைந்து உள்ளனர்.போபால்,

மத்திய பிரதேசத்தில் பிந்த் மாவட்டத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறை ஒன்று உள்ளது.  இதில், தண்டனை பெற்ற சிறை கைதிகள் பலர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், அதன் சுவர் இடிந்து விழுந்து சிறையின் ஒரு பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டது.  இந்த சம்பவத்தில் சிறையில் இருந்த 22 கைதிகள் காயம் அடைந்து உள்ளனர். 

காயம் அடைந்த 22 கைதிகளும் மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  எனினும் உயிரிழப்பு எதுவும் இல்லை என போலீஸ் சூப்பிரெண்டு மனோஜ் குமார் சிங் கூறியுள்ளார்.


Next Story