மேகதாது அணையை கட்டியே தீருவோம் - கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பிடிவாதம்


மேகதாது அணையை கட்டியே தீருவோம் - கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பிடிவாதம்
x
தினத்தந்தி 31 July 2021 9:34 AM GMT (Updated: 2021-07-31T15:04:12+05:30)

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.


பெங்களூரு
 
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் அணை கட்ட முயற்சிக்கிறது. இதற்கு தமிழ்நாடு அரசும் விவசாய அமைப்புகளும் நீண்ட காலமாக‌ எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிராக‌ தமிழக அரசின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில்  விசாரணையில் உள்ளது.

மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பா.ஜ.க. உண்ணாவிரதம் அறிவித்துள்ளது. இந்த  நிலையில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை யார் உண்ணாவிரதம் இருந்தாலும் சாப்பிட்டாலும் அதைப்பற்றி கவலை இல்லை.காவிரியில் கர்நாடகாவிற்கு உரிமை உள்ளது. அணையின் திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறி உள்ளார்.

Next Story