நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் அமலியால் மக்களின் வரிப் பணம் 133 கோடி ரூபாய் வீண்


நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் அமலியால் மக்களின் வரிப் பணம் 133 கோடி ரூபாய் வீண்
x
தினத்தந்தி 31 July 2021 6:49 PM GMT (Updated: 31 July 2021 6:49 PM GMT)

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளதால் இரண்டு வாரங்களில், 133 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த19-ந்தேதி தொடங்கியது. ஆனால் பெகாசஸ், வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் நாடாளுமன்றத்தின் சுமுக செயல்பாட்டை முடக்கி வருகின்றன.

இந்த பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி இடையூறு ஏற்படுத்தி வருவதால் இரு அவைகளும் தொடக்க நாளில் இருந்தே முடங்கி வருகின்றன.

இது தொடர்பாக மத்திய அரசின் சார்பில் விளக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் 'விவாதம் நடத்தப்படாது' என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில்,
மக்களவையில், 54 மணி நேரத்தில், 7 மணி நேரம் மட்டுமே அலுவல் நடந்துள்ளது. மாநிலங்களவையில், 53 மணி நேரத்தில், 11 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது.எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், 107 மணி நேரத்தில், 18 மணி நேரம் மட்டுமே நாடாளுமன்றம் செயல்பட்டுள்ளது. இதனால், 133 கோடி ரூபாய், மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story