8 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

8 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்
x
தினத்தந்தி 31 July 2021 7:56 PM GMT (Updated: 2021-08-01T01:26:42+05:30)

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்தவர் 32 வயது பெண்.‌ இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்தது.

புதுடெல்லி, 

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் நகரை சேர்ந்தவர் 32 வயது பெண்.‌ இவருக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்தது.

இதற்காக கணவன்-மனைவி இருவரும் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டபோதும் அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை.

இதையடுத்து அவர்கள் டெல்லியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது ‌அந்த பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கருப்பையில் குறைபாடு இருப்பதை கண்டறிந்தனர்.அதனை தொடர்ந்து செயற்கை கருத்தரித்தல் முறையில் அந்தப் பெண் கருவுற்றார்.

இந்த நிலையில் அந்தப் பெண் பிரசவத்திற்காக டெல்லி தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தை என 4 குழந்தைகள் பிறந்தன.

தாயும், அந்த 4 குழந்தைகளும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story