பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை: மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ்


பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை: மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ்
x
தினத்தந்தி 31 July 2021 11:30 PM GMT (Updated: 2021-08-01T05:00:38+05:30)

மருத்துவ, பல் மருத்துவ படிப்புகளில், மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு 10 சதவீதமும் இட ஒதுக்கீடு செய்து மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான பூபேந்தர் யாதவ், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “சமூக, பொருளாதார நீதி அடிப்படையில் சமத்துவ சமுதாயம் உருவாக்குவதை நோக்கமாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு இது. இதற்காக பிரதமர் மோடியை பா.ஜ.க. பாராட்டுகிறது” என தெரிவித்தார்.

அதே நேரத்தில் அவர் காங்கிரஸ் கட்சியை சாடினார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “நாட்டை நீண்ட காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் எதுவுமே செய்யவில்லை” என குறிப்பிட்டார்.

Next Story