தேசிய எல்லை மட்டுமல்ல மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை - ராகுல்காந்தி விமர்சனம்


தேசிய எல்லை மட்டுமல்ல மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை - ராகுல்காந்தி விமர்சனம்
x
தினத்தந்தி 1 Aug 2021 12:47 AM GMT (Updated: 1 Aug 2021 12:47 AM GMT)

பா.ஜ.க. அரசின் ஆட்சியில், தேசிய எல்லை மட்டுமல்ல மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

புதுடெல்லி,

அசாமில் முதல்-மந்திரி ஹிமாந்தபிஸ்வா சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. மிசோரமில் ஜோரம் தங்கா தலைமையிலான மிசோ தேசிய முன்னணி ஆட்சி செய்து வருகிறது. இவ்விரு மாநிலங்கள் இடையே நீண்டகாலமாக எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த 26-ந் தேதியன்று இதுவரையில்லாத வகையில் இரு மாநில போலீசார் இடையே கடும் மோதல் வெடித்தது. அது கையெறிகுண்டுவீச்சு, துப்பாக்கிச்சூடு அளவுக்கு சென்றது. இதில் அசாம் போலீசார் 5 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தில் இரு முதல்-மந்திரிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இந்தநிலையில்  அசாம்-மிசோரம் எல்லை பிரச்சினையை குறிப்பிட்டு, மோடி தலைமையிலான தற்போதைய ஆட்சியின்கீழ், தேசிய எல்லை அல்லது மாநில எல்லையும் பாதுகாப்பாக இல்லை என்று மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

 இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில்,

பிரதமர் மோடி தலைமையிலான தற்போதைய மத்திய பா.ஜ.க. அரசின் ஆட்சியில், தேசிய எல்லை மட்டுமல்ல மாநில எல்லைகளும் பாதுகாப்பாக இல்லை. சர்ச்சைகள் மற்றும் கலவரங்கள் நம் நாட்டின் புனித பூமியில் விதை போல் விதைக்கப்படுகின்றன. விளைவுகள் மோசமாக இருக்கும். மிசோரம், அசாம், உண்மையான எல்லை கட்டுப்பாடு என்று பதிவு செய்து இருந்தார்.

Next Story