கொரோனா தடுப்பூசி: மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட டோஸ் 49.49 கோடி


கொரோனா தடுப்பூசி:  மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்ட டோஸ் 49.49 கோடி
x
தினத்தந்தி 1 Aug 2021 7:53 AM GMT (Updated: 1 Aug 2021 7:53 AM GMT)

நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 49.49 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன.




புதுடெல்லி,

நாடு முழுவதுமுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை 49.49 கோடி கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன என மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்து உள்ளது.

இதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கையில், மொத்தம் 49 கோடியே 49 லட்சத்து 89 ஆயிரத்து 550க்கும் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன.  இவற்றில் வீணானது உள்பட மொத்தம் 46 கோடியே 70 லட்சத்து 26 ஆயிரத்து 662 டோஸ்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இதுதவிர 8 லட்சத்து 4 ஆயிரத்து 220 டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.  நாடு முழுவதுமுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் 3 கோடியே 58 ஆயிரத்து 190 டோஸ்கள் பயன்படுத்தப்படாமல் கைவசம் உள்ளன என்றும் தெரிவித்து உள்ளது.


Next Story