கடந்த ஜூலையில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.16 லட்சம் கோடி; நிதி அமைச்சகம் அறிவிப்பு


கடந்த ஜூலையில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.16 லட்சம் கோடி; நிதி அமைச்சகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 Aug 2021 8:35 AM GMT (Updated: 1 Aug 2021 8:35 AM GMT)

நாட்டில் கடந்த ஜூலையில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1,16,393 கோடி என நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் ஜி.எஸ்.டி. வசூல் ஆனது, ஒரு லட்சம் கோடிக்கு கூடுதலாக 8 மாதங்களாக வசூலான நிலையில், கடந்த ஜூனில் ஒரு லட்சம் கோடிக்கு கீழ் குறைவாக வசூலானது.

இந்நிலையில், கடந்த ஜூலையில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1,16,393 கோடி என நிதி அமைச்சகம் அறிவித்து உள்ளது.  இதனால், மீண்டும் நாட்டில் ஒரு லட்சம் கோடிக்கு கூடுதலாக ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலையை விட இந்த ஆண்டு ஜூலையில் 33% கூடுதலாக ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது.  இவற்றில் சி.ஜி.எஸ்.டி. ரூ.22,197 கோடி, ஐ.ஜி.எஸ்.டி. 57,864 கோடி மற்றும் எஸ்.ஜி.எஸ்.டி. 28,541 கோடி என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story