தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேருக்கு கொரோனா தொற்று + "||" + India reports 40,134 new COVID19 cases, 36,946 discharges & 422 deaths in last 24 hours as per Union Health Ministry.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,134 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40 ஆயிரத்து 134 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தினசரி பாதிப்பு ஏறுமுகம் கண்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 40 ஆயிரத்து 134 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,16,95,958 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 422 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,773 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 36,946 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,08,57,467 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.36 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 4,13,718 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1.31 சதவீதமாக  உள்ளது.

நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 47 கோடியே 22 லட்சத்து 23 ஆயிரத்து 639 ஆக உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் சற்று குறைந்த கொரோனா பாதிப்பு: புதிதாக 29,616 பேருக்கு தொற்று!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29,616 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
2. இந்தியாவுக்கு வருமாறு ஜோ பைடனுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி
ஜோ பைடனிடம் இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார் என இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
3. ஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ விமானங்களை இந்தியா வாங்குகிறது...
ஸ்பெயின் நிறுவனத்திடம் இருந்து 56 ராணுவ விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
4. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,256 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
5. நாட்டில் இதுவரை 80 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது: மத்திய சுகாதாரத்துறை
இந்தியாவில் இதுவரை 80 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.