முன்னாள் மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்


முன்னாள் மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எதிராக டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல்
x
தினத்தந்தி 2 Aug 2021 11:12 AM GMT (Updated: 2021-08-02T16:42:19+05:30)

முன்னாள் மல்யுத்த வீரர் சுஷில்குமாருக்கு எத்ராக டெல்லி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளனர்.

புதுடெல்லி

சாகர் கொலை வழக்கில் முன்னாள் மல்யுத்த வீரர் சுஷில்குமார் முக்கிய குற்றவாளி என்று குற்றப்பத்திரிகையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சுஷில்குமார் முக்கிய குற்றவாளி என டெல்லி ஐகோர்ட்டில் போலீசார் 170 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். சுஷில் குமார் மற்றும் 19 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஐந்து பேர் தலைமறைவாக உள்ளனர்.

சுஷில் குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 23 வயது மல்யுத்த வீரர் சாகர் தங்கர் மற்றும் அவரது இரண்டு நண்பர்கள் சோனு மற்றும் அமித் குமார் ஆகியோரை மே 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தாக்கினர்.பின்னர் படுகாயமடைந்த சாகர் உயிரிழந்தார். இதி தொடர்ந்து கொலைவழக்கு பதிவு செய்யப்பட்டது.Next Story