கோவேக்சின் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக செயல் திறன் மிக்கது: ஆய்வில் தகவல்


கோவேக்சின் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக செயல் திறன் மிக்கது: ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 2 Aug 2021 3:06 PM GMT (Updated: 2 Aug 2021 3:06 PM GMT)

டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து பாரத் பயோடெக் நிறுவனம் கண்டறிந்துள்ள கோவேக்சின் தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுள்ளது. கோவேக்சின் தடுப்பூசியானது, டெல்டா வகை கொரோனாவுக்கு அறிகுறிகள் இல்லாமல் தடுப்பதில் 77.8 சதவீதம் செயல் திறன் மிக்கது ஆகும். 

இந்த நிலையில், டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு எதிராகவும் கோவாக்சின் சிறப்பாக செயல்படுகிறது என ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. 

இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இதனால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளனர். இதுகுறித்த ஆய்வும் தீவிரமடைந்து வருகிறது. இந்த வகை டெல்டா பிளஸ் வைரஸுக்கு எதிராக கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.  இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதன் முதலாக கண்டறியப்பட்ட டெல்டா பிளஸ் கொரோனா 20 நாடுகளில் பரவியுள்ளது. 

Next Story