மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது: பள்ளி கல்வித்துறை மந்திரி


மராட்டியத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது: பள்ளி கல்வித்துறை மந்திரி
x
தினத்தந்தி 3 Aug 2021 2:49 AM GMT (Updated: 3 Aug 2021 2:49 AM GMT)

மராட்டியத்தில் இன்று 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.

வெள்ளத்தால் தாமதம்
மராட்டியத்தில் கொரோனா பரவல் காரணமாக 10, 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. எனவே 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு இறுதி தேர்வு, செய்முறை மற்றும் பருவ தேர்வு முடிவுகளை வைத்தும், 12-ம் வகுப்பு 
மாணவர்களுக்கு 11-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் செய்முறை, பருவ தேர்வு முடிவுகளை அடிப்படையாக வைத்தும் மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தோ்வு முடிவு கடந்த 2 வாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.12-ம் வகுப்பு பொது தேர்வு ஜூலை 31-ந் தேதிக்குள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மராட்டியத்தில் கொங்கன், மேற்கு மராட்டியத்தில் பெய்த பலத்த மழைக்காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இன்று தேர்வு முடிவு
இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை நேற்று மாலை பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் வெளியிட்டார். மேலும் அவர் குறுகிய காலத்தில் மதிப்பெண் பட்டியலை தயார் செய்து, தேர்வு முடிவுகளை வெளியிட கடுமையாக உழைத்த கல்லூரிகள், ஆசிரியர்களுக்கு நன்றி கூறினார்.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை இன்று மாலை 4 மணிக்கு தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள் hscresult.11thadmission.org.in, msbshse.co.in, hscresult.mkcl.org, mahresult.nic.in., lokmat.news18.com, maharesult.nic.in, msbshse.co.in அகிய 
இணையதள முகவரிகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Next Story