எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகள் அமளி:  மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 3 Aug 2021 6:07 AM GMT (Updated: 3 Aug 2021 6:07 AM GMT)

எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 19-ந் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் சபை நடவடிக்கைகளை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. விவசாயிகள் பிரச்சனை, டெலிபோன் ஒட்டுகேட்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றை எழுப்பி சபையை நடத்த விடாமல் செய்து வருகின்றனர். இதனால் ஒவ்வொரு நாளும் சபை முடங்கி வருகிறது. இந்த அமளிக்கு மத்தியிலும் முக்கிய மசோதாக்கள் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன.
 
இன்றும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மாநிலங்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவையில் தொடர்ச்சியாக எதிர்கட்சியினர் அமளியில்  ஈடுபடுவதாகவும்  பெரும்பான்மையான உறுப்பினர்கள் அவையை நடத்த வேண்டும் என கோருகின்றனர் என  அவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார்,


Next Story