கேரளாவில் மேலும் 23,676- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் மேலும் 23,676- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 3 Aug 2021 1:27 PM GMT (Updated: 3 Aug 2021 1:27 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,676- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், 

கேரளாவில் மேலும்  23,676-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் மேலும் 34 லட்சத்து 49 ஆயிரத்து 149 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 148-பேர் உயிரிழந்துள்ளனர். 

கேரளாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17,103- ஆக  உயர்ந்துள்ளது.  தொற்று பாதிப்பு காரணமாக இன்று 15,626- பேர் உயிரிழந்துள்ளனர். 

தொற்று பாதிப்பை கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 1.99 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பு விகிதம் 11.87- சதவிகிதமாக உள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக மலப்புரம் மாவட்டத்தில் 4276-பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

Next Story