பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு துணை நிற்பேன் - ராகுல்காந்தி பேட்டி


பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு துணை நிற்பேன் - ராகுல்காந்தி பேட்டி
x
தினத்தந்தி 4 Aug 2021 6:42 AM GMT (Updated: 2021-08-04T12:23:34+05:30)

டெல்லியில் ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்த ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

புதுடெல்லி,

கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது பட்டியிலன சிறுமி பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சிறுமியில் உடல் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டது.

இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவரும் நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாரை சந்தித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி கூறுகையில்,

நான் குடும்பத்தாருடன் பேசினேன். அவர்கள் நீதியை தவிர்த்து வேறு எதுவும் கேட்கவில்லை. நீதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு உதவ வேண்டும். அதை நாங்கள் செய்வோம். உங்களுடன் துணை நிற்பேன் என அவர்களிடம் தெரிவித்தேன். நீதி கிடைக்கும் வரை ராகுல் காந்தி அவர்களுக்கு துணை நிற்பான் என்றார்.

சிறுமியை சந்தித்த பிறகு, ராகுல் காந்தி டுவிட்டர் பதிவில் "சிறுமியின் பெற்றோரின் கண்ணீர் ஒன்றை தான் உணர்த்துகிறது. அவர்களின் மகளுக்கு நாட்டின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதியை தேடிய பயணத்தில் நான் அவர்களுடன் இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.

Next Story