‘லவ்லினா பெற்ற வெற்றி இந்தியர்களை மேலும் ஊக்கப்படுத்தும்’ பிரதமர் மோடி வாழ்த்து


‘லவ்லினா பெற்ற வெற்றி இந்தியர்களை மேலும் ஊக்கப்படுத்தும்’ பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 4 Aug 2021 6:51 AM GMT (Updated: 2021-08-04T12:21:56+05:30)

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

69 கிலோ எடைப்பிரிவான மகளிர் வெல்ட்டர் வெயிட் அரையிறுதிப் போட்டியில் துருக்கி வீராங்கனை சுர்மெனெலி புசெனாஸிடம் தோல்வியுற்றார் இந்தியாவின் லவ்லினா. இதனால் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3-வது பதக்கம் இதுவாகும். ஏற்கெனவே மீராபாய் சானு, பி.வி.சிந்து ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளர்.

இந்நிலையில்,  ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், 

லிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினாவிற்கு வாழ்த்துக்கள். குத்துச்சண்டையில் லவ்லினா பெற்ற வெற்றி இந்தியர்களை மேலும் ஊக்கப்படுத்தும். போட்டியில் லவ்லினாவின் உறுதித்தன்மை போற்றத்தக்கது என பதிவிட்டுள்ளார்.

Next Story