மாநிலங்களவையில் அமளி:திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் இடைநீக்கம்


மாநிலங்களவையில் அமளி:திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 6 பேர் இடைநீக்கம்
x
தினத்தந்தி 4 Aug 2021 8:21 AM GMT (Updated: 4 Aug 2021 8:21 AM GMT)

பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ‘பெகாசஸ்’ உளவு விவகாரம்,புதிய வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருகின்றன. பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை. எனவே, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கைகோர்த்து ஒற்றுமையாக செயல்பட  எதிர்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

இன்றும்  எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திக்கப்பட்டது.  இந்தநிலையில் மாநிலங்களவையை தொடர்ந்து முடக்கும் எதிர்கட்சிகள் எம்.பி.க்கள் இடை நீக்கம் செய்யப்படுவார்கள். மாநிலங்களவையை முடக்கும் எம்.பி.க்களின் பட்டியல் வெளியிடப்படும் என மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான  வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இந்த நிலையில் டோலா சென், நதிமுல் ஹக், அபீர் ரஞ்சன் பிஸ்வாஸ்,சாந்தா சேத்ரி, அர்பிதா கோஸ், மவுசம் நூர். ஆகிய 6 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இன்று ஒரு நாள் மட்டும் இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

இடைநீக்க உத்தரவுக்கு சில நிமிடங்களுக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரெக் ஓ பிரையன் டதனது டுவிட்டரில் , எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராஜ்யசபாவில் மதியம் 2 மணிக்கு ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.   இன்று. மோடி சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைவதைப் பார்க்க வாருங்கள் என்று கூறி இருந்தார்.

இது போல் மக்களவையும் 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

Next Story