தொழிலாளர்கள் சென்ற காரை வெடிகுண்டு வைத்து தகர்த்த மாவோயிஸ்டுகள் ; ஒருவர் பலி


தொழிலாளர்கள் சென்ற காரை வெடிகுண்டு வைத்து தகர்த்த மாவோயிஸ்டுகள் ; ஒருவர் பலி
x
தினத்தந்தி 5 Aug 2021 6:43 AM GMT (Updated: 2021-08-05T12:13:32+05:30)

மாவோயிஸ்டுகள் போலீஸ் வாகனம் என்று தவறாக நினைத்து தொழிலாளர்கள் காரை குறிவைத்திருக்கலாம்.

தண்டேவாடா

சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் இன்று தொழிலாளர்கள் பயணித்த காரை வெடிகுண்டு வைத்து தகர்த்தனர் இதில்  ஒரு தொழிலாளி உயிரிழந்தார் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாகனத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் தொழிலாளர்கள். அவர்கள் அனைவரும் மத்திய பிரதேசம்  பாலகாட்டிலிருந்து தெலுங்கானாவுக்கு சென்று கொண்டிருந்தனர். படுகாயமடைந்தவர்கள்  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் ஒருவரான தன் சிங் சிகிச்சை பலனின்றி  பலியானார்.இந்த சம்பவம் காலை 7.30 மணியளவில் மாலேவாதி போலீஸ்  நிலைய எல்லைக்கு உட்பட்ட கோட்டியா கிராமத்திற்கு அருகில் நடந்தது.இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உட்பட 11 பேர் காயமடைந்தனர் என கூறினார்.

மாவோயிஸ்டுகள்  போலீஸ் வாகனம் என்று தவறாக நினைத்து அதை குறிவைத்திருக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்து உள்ளார்.

Next Story