இந்திய ஆக்கி அணியின் சாதனையால் நாடு முழுவதும் பெருமை கொள்கிறது - ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்


இந்திய ஆக்கி அணியின் சாதனையால் நாடு முழுவதும் பெருமை கொள்கிறது - ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்
x
தினத்தந்தி 5 Aug 2021 8:45 AM GMT (Updated: 2021-08-05T14:15:53+05:30)

இந்திய ஆக்கி அணியின் சாதனையால் நாடு முழுவதும் பெருமை கொள்கிறது என்று ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கூறினார்.

புவனேஷ்வர்,

டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கிப்போட்டியில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசா முதல்-மந்தி நவீன் பட்நாயக் இந்திய ஆண்கள் ஆக்கி அணியிடம் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். 

அதன் பிறகு அவர் கூறுகையில்,

இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் சாதனையால் நாடு முழுவதும் பெருமை கொள்கிறது. கடந்த சில நாட்களில், ஆக்கி உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியரையும் ஒன்றிணைத்துள்ளது. இந்திய அணியின் இந்த செயல்திறன் பலரை ஊக்குவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story