வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் 4% ஆக தொடரும் - சக்திகாந்த தாஸ்


வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதம் 4% ஆக தொடரும் - சக்திகாந்த தாஸ்
x
தினத்தந்தி 6 Aug 2021 5:42 AM GMT (Updated: 6 Aug 2021 5:42 AM GMT)

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) 4 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போவும் 3.35 சதவிகிதமாக தொடரும் என்று இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. தற்போதுள்ள 4% வட்டி விகிதமே தொடரும். ரிவர்ஸ் ரெப்போவும் 3.35 சதவிகிதமாக தொடரும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021- 2022-ல் 9.5% ஆக இருக்கும். கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து பொருளாதாரம் மீண்டு வருகிறது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் நிதிக் கட்டமைப்பு செயல்படுகிறது. பொருளாதாரம் மீண்டு வரும் நிலையில், வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம்(ரெப்போ) 4 சதவிகிதமாகவும், ரிவர்ஸ் ரெப்போவும் 3.35 சதவிகிதமாக தொடரும். 

மேலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021- 2022-ல் 9.5% ஆக இருக்கும்.  2022-23 முதல் காலாண்டுக்கான பணவீக்கம் 5.1 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்றார். 


Next Story