எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணிவரை ஒத்திவைப்பு


எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: நாடாளுமன்ற இரு அவைகளும் 12 மணிவரை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 6:19 AM GMT (Updated: 2021-08-06T11:49:08+05:30)

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே அவையில் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை கூடிய இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். இதனால், 14வது நாளாக அவையை பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Next Story