அசாம்-மேகாலயா இடையேயான எல்லை பிரச்சினையை தீர்க்க குழுக்கள் அமைக்க முடிவு


அசாம்-மேகாலயா இடையேயான எல்லை பிரச்சினையை தீர்க்க குழுக்கள் அமைக்க முடிவு
x
தினத்தந்தி 6 Aug 2021 8:58 PM GMT (Updated: 2021-08-07T02:28:19+05:30)

அசாம்-மேகாலயா இடையேயான எல்லை பிரச்சினையை தீர்க்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என இரு மாநில முதல்-மந்திரிகளும் கூட்டாக அறிவித்தனர்.

கவுகாத்தி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமுக்கும், அதனுடன் எல்லையை பகிரும் பிற மாநிலங்களுக்கும் இடையே எல்லை விவகாரத்தில் நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது. இதில் மிசோரம் எல்லைப்பகுதியில் சமீபத்தில் நடந்த மோதலில் உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.

இந்த நிலையில் மேகாலயா-அசாம் இடையேயான எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண இரு மாநிலங்களும் முடிவு செய்துள்ளன. அதன்படி இந்த பிரச்சினையை ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என இரு மாநில முதல்-மந்திரிகளும் நேற்று கூட்டாக அறிவித்தனர்.

ஒவ்வொரு குழுவிலும் மந்திரி தலைமையில், அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள் என கூறிய அவர்கள், இரு மாநிலங்களுக்கு இடையே 12 இடங்கள் சர்ச்சைக்குரிய பகுதிகளாக விளங்கும் நிலையில், அவற்றில் முதற்கட்டமாக 6 பகுதிகளுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினர்.

வரலாற்று ஆதாரங்கள், இனம், நிர்வாக வசதி, மனநிலை மற்றும் சம்பந்தப்பட்ட மக்களின் உணர்வுகள் மற்றும் நிலத்தின் தொடர்ச்சியான தன்மை போன்ற அம்சங்களின் அடிப்படையில் இந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக இரு மாநில முதல்-மந்திரிகளும் தெரிவித்தனர்.

Next Story