காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வரும் 9 ஆம் தேதி காஷ்மீர் பயணம்


காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வரும்  9 ஆம் தேதி காஷ்மீர் பயணம்
x
தினத்தந்தி 7 Aug 2021 12:07 AM GMT (Updated: 2021-08-07T05:37:21+05:30)

காங்கிரஸ் எம்.பி ரகுல் காந்தி வரும் 9 ஆம் தேதி காஷ்மீர் பயணம் மேற்கொள்கிறார்.

புதுடெல்லி, 

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திங்கட்கிழமை காஷ்மீருக்கு சுற்றுப்பயணம் புறப்படுகிறாா். அங்கு 2 நாட்கள் தங்கி இருந்து கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகனின் திருமணம் 9-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. 

அதில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காங்கிரஸ் கட்சி தலைமையகம் திறப்புவிழா நடக்கிறது. அதை தொடங்கி வைத்து பேசுவதுடன், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.

Next Story