கேல் ரத்னா விருதுக்கு மாற்று பெயர் சூட்டியது நேரு-காந்தி குடும்பத்தினர் மீதான பா.ஜனதாவின் வெறுப்பை காட்டுகிறது


கோப்பு படம்
x
கோப்பு படம்

கேல் ரத்னா விருதுக்கு மாற்று பெயர் சூட்டியது நேரு- காந்தி குடும்பத்தினர் மீதான பா.ஜனதாவின் வெறுப்பை காட்டுகிறது.

மும்பை, 
கேல் ரத்னா விருதுக்கு மாற்று பெயர் சூட்டியது நேரு- காந்தி குடும்பத்தினர் மீதான பா.ஜனதாவின் வெறுப்பை காட்டுகிறது. 
 கீழ்தரமான அரசியல்
கேல் ரத்னா விருது பெயர் மாற்றத்துக்கு மராட்டிய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மேஜர் தயான் சந்த் ஆக்கி விளையாட்டில் மிகச்சிறந்த ஜாம்பவான். மத்திய அரசு அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என நினைத்திருந்தால், அவரின் பெயரில் புதிதாக ஒரு விருதை அறிவித்திருக்கலாம் அல்லது புதிய விளையாட்டு கொள்கையை அவர் பெயரில் தொடங்கி இருக்கலாம். 
பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு நேரு- காந்தி குடும்பத்தின் மீது வெறுப்பு உள்ளது. மதிப்புமிக்க விருதின் பெயரை மாற்றிய மத்திய அரசின் முடிவு இந்த வெறுப்பை தான் பிரதிபலிக்கிறது. 
இதில் மேஜர் தயான் சந்தின் பெயருக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறும் கேள்விக்கே இடமில்லை. ஆனால் இந்த பெயர் மாற்றம் காந்தியின் மீதான வெறுப்பால் நடந்துள்ளது. இது பா.ஜனதாவின் கீழ்தரமான அரசியலை காட்டுகிறது. 
பங்கு என்ன?
நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் 1984-ம் ஆண்டு முதல் 1989-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் பங்களிப்பு ஈடு இணையற்றது. 
ராஜீவ் காந்தி விளையாட்டு துறைக்கு எந்த பங்களிப்பும் வழங்கவில்லை என்றால் பிரதமர் நரேந்திர மோடியின் பங்கு என்ன?, ஆமதாபாத்தில் உள்ள மொடேரா ஸ்டேடியத்திற்கு பிரதமர் மோடியின் பெயரை சூட்டியதற்கு பதிலாக ஒரு சிறந்த வீரரின் பெயரை சூட்டியிருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார். 

Next Story