ராஜஸ்தானில் வெள்ள பாதிப்புகளை படகில் சென்று பார்வையிட்ட மக்களவை சபாநாயகர்


ராஜஸ்தானில் வெள்ள பாதிப்புகளை படகில் சென்று பார்வையிட்ட மக்களவை சபாநாயகர்
x

ராஜஸ்தானில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை படகில் சென்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பார்வையிட்டு உள்ளார்.புதுடெல்லி,

வடமாநிலங்களில் பரவலாக பருவமழை பெய்து வருகிறது.  இவற்றில் ராஜஸ்தானில் கனமழையால் பல்வேறு நகரங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன.  மக்கள் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பு நிறைந்த பகுதிகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், கோட்டா-பண்டி தொகுதியின் எம்.பி.யான மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோட்டா மாவட்டத்தின் சங்கோடு நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காற்று நிரப்பப்பட்ட படகு ஒன்றில் சென்று பார்வையிட்டார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, வெள்ளம் பேரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது.  நிலைமை கடுமையாக உள்ளது.  ஹதோதி நகரில் பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.


Next Story