நாட்டில் 5.62 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன; மத்திய அரசு


நாட்டில் 5.62 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன; மத்திய அரசு
x
தினத்தந்தி 7 Aug 2021 4:39 PM GMT (Updated: 7 Aug 2021 4:39 PM GMT)

நாட்டில் இதுவரை 5.62 கோடிக்கு கூடுதலானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முனைப்புடன் நடந்து வருகின்றன.  இந்நிலையில், மத்திய சுகாதார துறை வெளியிட்டுள்ள செய்தியில், இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின்படி, 50.62 கோடிக்கும் கூடுதலானோருக்கு (50,62,18,296) கொரோனா தடுப்பூசிகள் செலுத்தியதற்கான மைல்கல்லை நாடு கடந்துள்ளது.

இதேபோன்று, இன்றிரவு 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின்படி, 50 லட்சத்திற்கும் கூடுதலான (50,00,384) தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.  18-44 வயது பிரிவில் இதுவரை 27,55,447 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 5,08,616 பயனாளிகள் தங்களது 2வது தவணை தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் மராட்டியம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்கள் ஒரு கோடிக்கும் கூடுதலான தடுப்பூசிகளை 18-44 வயது பிரிவினருக்கு செலுத்தியுள்ளன.

நாட்டில் இதுவரை மொத்தம் 39,38,95,801 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 11,23,22,495 பேருக்கு 2ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன என தெரிவித்து உள்ளது.


Next Story