காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ்காரர் பலி


காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 7 Aug 2021 9:09 PM GMT (Updated: 2021-08-08T02:39:12+05:30)

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ்காரர் பலியானார்.

ஸ்ரீநகர், 

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள பம்பே பகுதியில் நேற்று மாலை போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் சிலர், திடீரென போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

அதில் படுகாயமடைந்த நிசார் அகமது என்ற போலீஸ்காரர் ஆஸ்பத்தியில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவ இடத்தை போலீசார் சுற்றி வளைத்து, தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடிவருகின்றனர்.


Next Story