டெல்லியில் நாளை முதல் வாராந்திர சந்தைகள் திறப்பு- கெஜ்ரிவால்


டெல்லியில் நாளை முதல் வாராந்திர சந்தைகள் திறப்பு- கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 8 Aug 2021 1:07 AM GMT (Updated: 8 Aug 2021 1:07 AM GMT)

டெல்லியில் நாளை முதல் வாராந்திர சந்தைகள் திறக்கப்படும் என்று முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா வைரசின் 2-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாக டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரட்டை இலக்க எண்களில் பதிவாகி வருவது அங்குள்ள மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. 

தொற்று பரவல் கணிசமாக குறைந்துள்ளதால், டெல்லியில் பெரும்பாலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.  இந்த நிலையில், நாளை (திங்கள் கிழமை) முதல் வாராந்திர சந்தைகள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்று டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

இது குறித்து கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவில் கூறுகையில், “ ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வாராந்திர சந்தைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் , ஒவ்வொருவரின் ஆரோக்கியமும் முக்கியம். ஆகவே,  சந்தைகள்  திறந்த பிறகு கொரோனா தடுப்பு விதிகளை அனைத்து தரப்பினரும் தவறாது பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்

Next Story