கேரளாவில் கட்டுப்பாட்டில் புதிய மாற்றம்: கடைகள், வங்கிகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை


கேரளாவில் கட்டுப்பாட்டில் புதிய மாற்றம்: கடைகள், வங்கிகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி கட்டாயம் இல்லை
x
தினத்தந்தி 8 Aug 2021 2:04 AM GMT (Updated: 8 Aug 2021 2:04 AM GMT)

கேரளாவில் கடைகள், வங்கிகளுக்கு செல்வோருக்கு தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அரசு பணிந்து தடுப்பூசி கட்டாயம் இல்லை என்று அறிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு கடைகள் மற்றும் வங்கிகளுக்கு செல்லும் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையில் கொரோனா இல்லை என்ற சான்று வைத்து இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்தது.

இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து புதிய கட்டுப்பாட்டில் கேரள அரசு மாற்றம் செய்துள்ளது.

இதுபற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது-

கேரளாவில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வாரத்தில் 6 நாட்கள் தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், கடைகள், வங்கிகள் ஆகியவற்றுக்கு செல்வோர் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. தற்போது இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டு உள்ளது என்று கூறினார்.

Next Story