சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது


சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 8 Aug 2021 5:46 AM GMT (Updated: 2021-08-08T11:16:57+05:30)

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.

சென்னை,

தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, , திமுக முதன்மை செயலாளர் கேஎன் நேரு மற்றும் 9 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்பதால் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story