பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டின் மீது நம்பிக்கை உள்ளது - ப.சிதம்பரம் கருத்து


பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டின் மீது நம்பிக்கை உள்ளது - ப.சிதம்பரம் கருத்து
x
தினத்தந்தி 8 Aug 2021 10:12 PM GMT (Updated: 8 Aug 2021 10:12 PM GMT)

பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டின் மீது நம்பிக்கை உள்ளது ப.சிதம்பரம் கருத்து

சென்னை, 

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நூற்றுக்கணக்கான செல்போன்கள் ஊடுறுவப்பட்ட 50 ஆயிரம் தொலைபேசி எண்களின் சாத்தியமான பட்டியலை கொண்ட 10 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் ஒன்று என்று செய்தி வெளிவந்துள்ளது. 

என்.எஸ்.ஓ. குழுமம் 40 நாடுகள் மற்றும் 60 ஏஜென்சிகள் தனது வாடிக்கையாளர்கள் என்று ஒப்புக்கொண்டுள்ளது. ‘பெகாசஸ்' மென்பொருளை ஒட்டு கேட்பதற்காக அந்த 10 நாடுகளும் பயன்படுத்தியுள்ளன. அதில் இந்தியாவும் ஒன்றா? இன்னும் கேள்விக்குறியாக உள்ளது. எங்கள் நம்பிக்கை சுப்ரீம் கோர்ட்டின் மீது உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story