தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ரூ.19,500 கோடி; பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார் + "||" + The next installment of the Prime Minister's Kisan scheme for farmers is Rs 19,500 crore; Prime Minister Modi releases today

விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ரூ.19,500 கோடி; பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்

விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ரூ.19,500 கோடி; பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்
கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறும் வகையில் அடுத்த தவணையாக ரூ.19,500 கோடி நிதியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.
புதுடெல்லி,

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த திட்டத்தில் இதுவரை ரூ.1.38 லட்சம் கோடி நிதி உதவியானது, விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை, பிரதமர் மோடி இன்று பிற்பகல் 12:30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக விடுவிக்க இருக்கிறார்.  இந்த விழாவில் மத்திய வேளாண் மந்திரியும் கலந்து கொள்கிறார்.

இதன்படி 9.75 கோடிக்கும் கூடுதலான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.  இந்த நிகழ்ச்சியின்போது விவசாய பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவதுடன், நாட்டு மக்களிடமும் உரையாற்றுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளுக்கு 9-வது தவணை நிதியுதவி - பிரதமர் மோடி இன்று விடுவித்தார்
விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 9-வது தவணைத் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.
2. விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நரேந்திரமோடி - மு.க.ஸ்டாலின்!
உலகில் எல்லா தொழில்களையும்விட உன்னதமான தொழில் விவசாயம்தான். அதனால்தான், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அய்யன் திருவள்ளுவர் உழவர்களின் மேன்மை குறித்து, “உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை” என்ற திருக்குறளை எழுதியுள்ளார்.