தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 9-வது தவணை நிதியுதவி - பிரதமர் மோடி இன்று விடுவித்தார் + "||" + PM Narendra Modi releases the 9th instalment of PM Kisan Samman Nidhi Scheme, via video conferencing.

விவசாயிகளுக்கு 9-வது தவணை நிதியுதவி - பிரதமர் மோடி இன்று விடுவித்தார்

விவசாயிகளுக்கு 9-வது தவணை நிதியுதவி - பிரதமர் மோடி இன்று விடுவித்தார்
விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் 9-வது தவணைத் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவித்தார்.
புதுடெல்லி,

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த திட்டத்தில் இதுவரை ரூ.1.38 லட்சம் கோடி நிதி உதவியானது, விவசாய குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் கிசான் திட்டத்தின் 9 வது தவணை நிதியை, பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக விடுவித்தார். இதன்படி 9.75 கோடிக்கும் கூடுதலான விவசாய குடும்பங்களுக்கு சுமார் ரூ. 19,500 கோடி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படும். இந்த விழாவில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கலந்து கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் திட்டத்தின் அடுத்த தவணை ரூ.19,500 கோடி; பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்
கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறும் வகையில் அடுத்த தவணையாக ரூ.19,500 கோடி நிதியை பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.
2. விவசாயிகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நரேந்திரமோடி - மு.க.ஸ்டாலின்!
உலகில் எல்லா தொழில்களையும்விட உன்னதமான தொழில் விவசாயம்தான். அதனால்தான், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அய்யன் திருவள்ளுவர் உழவர்களின் மேன்மை குறித்து, “உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை” என்ற திருக்குறளை எழுதியுள்ளார்.