2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற விரும்புகிறோம் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி


2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற விரும்புகிறோம் - மத்திய சுகாதாரத்துறை மந்திரி
x
தினத்தந்தி 9 Aug 2021 11:12 AM GMT (Updated: 2021-08-09T16:42:44+05:30)

2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற விரும்புகிறோம் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காசநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில், துணைஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பேசுகையில், 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம். சுகாதாரத்தை நாங்கள் வளர்ச்சியுடன் ஒருபோதும் இணைந்தது இல்லை. 

பிரதமர் மோடியின் தலைமையின்கீழ், சுகாதாரத்தின் வரையறை விரிவாகியுள்ளது. வரும் நாட்களில் சுகாதாரத் துறையை மேலும் வலுவடைய செய்யும் இலக்கை இந்தியா எட்டும்’ என்றார்.

Next Story