டெல்லியில் கடந்த 3 மாதங்களில் 80 சதவிகிதம் பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி

டெல்லியில் கடந்த 3 மாதங்களில் 80 சதவிகிதம் பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. இதில் சமீபத்திய மாறுபாடாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதை கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கும் நிலையில், டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
மற்ற வகைகளைக் காட்டிலும் டெல்டா வகை அதி விரைவாக தாக்கக் கூடியது என்றும், அனைத்து நாடுகளிலும் இன்னும் சில மாதங்களில் பெருமளவு ஆதிக்கம் செலுத்தப் போவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் கடந்த 3 மாதங்களில் 80 சதவிகிதம் பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை கூறுகையில்,
டெல்லியில் கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 83.3 சதவிகிதம் பேருக்கு டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் 53.9 சதவிகிதம் பேருக்கும், மே மாதத்தில் 81.7 சதவிகிதம் பேருக்கும், ஜூன் மாதத்தில் 88.6 சதவிகிதத்தினருக்கும் டெல்டா வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த தரவுகளின் மூலம் 5,752 பரிசோதனை மாதிரிகளில் 1,689 பேருக்கு டெல்டா வகை கொரோனா கண்டறியப்படுகிறது. இதேபோன்று 947 பேருக்கு ஆல்பா வகை கொரோனா தொற்றும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story