கோவா தேர்தல் பார்வையாளராக ப.சிதம்பரம் நியமனம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 9 Aug 2021 8:00 PM GMT (Updated: 2021-08-10T01:39:17+05:30)

கோவா மாநிலத்தின் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பார்வையாளராக அக்கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்

பனாஜி, 

காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், கோவா மாநில தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளரான கே.சி.வேணுகோபால் நேற்று முன்தினம் பிறப்பித்தார்.

“பா.சிதம்பரம், கோவாவில் வரப்போகும் சட்டசபை தேர்தலுக்கான ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும் தேர்தல் யுக்திகளை மேற்பார்வையிடுவார்” என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story