பெகாசஸ் விவகாரம்: மாநிலங்களவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த தி.மு.க. எம்.பி.க்கள்


பெகாசஸ் விவகாரம்: மாநிலங்களவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த தி.மு.க. எம்.பி.க்கள்
x
தினத்தந்தி 9 Aug 2021 11:59 PM GMT (Updated: 9 Aug 2021 11:59 PM GMT)

பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி மாநிலங்களவைக்கு தி.மு.க. எம்.பி.க்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.

புதுடெல்லி, 

புதிய வேளாண் சட்டங்கள், பெகாசஸ் விவகாரம், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளால் நாடாளுமன்றம் தினந்தோறும் முடங்கி வருகிறது. நேற்றும் வழக்கம்போல அமளி நடைபெற்று நாடாளுமன்றம் முடங்கியது. இதற்கிடையே மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் சண்முகம் உள்ளிட்டோர் நேற்று கருப்பு சட்டை அணிந்து அவைக்கு சென்றனர்.

இதுகுறித்து திருச்சி சிவா கூறுகையில், “மழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்ற அலுவல்கள் நடைபெறாமல் உள்ளன. பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி வருகிறோம். காப்பீட்டுத்துறையின் லட்சக்கணக்கான தொழிலாளர்களை பாதிக்கும் காப்பீட்டு மசோதாவையும் எதிர்க்கிறோம். இதனால் கருப்பு சட்டை அணிந்து எங்களது எதிர்ப்பை பதிவு செய்தோம்” என்றார்.

Next Story