எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான குற்றவழக்குகளை ஐகோர்ட்களின் அனுமதியின்றி திரும்பப் பெறக்கூடாது - சுப்ரீம் கோர்ட்


எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான குற்றவழக்குகளை ஐகோர்ட்களின்  அனுமதியின்றி திரும்பப் பெறக்கூடாது - சுப்ரீம் கோர்ட்
x
தினத்தந்தி 10 Aug 2021 11:30 AM GMT (Updated: 2021-08-10T17:00:29+05:30)

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான குற்றவழக்குகளை ஐகோர்ட் அனுமதியின்றி திரும்பப் பெறக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவாக முடிக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் விசாரணை இன்று தலைமை நீதிபதி ரமணா, நீதிபதிகள் வினித் கரண், சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள் மாநில அரசுகள் எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற முடியாது. அவ்வாறு வாபஸ் பெறுவதாக இருந்தால், அந்தந்த மாநில ஐகோர்ட்டில் அனுமதி பெற வேண்டும் என்று கூறினார்கள். மேலும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்க சிறப்பு பெஞ்சுகளை அமைக்க அனுமதிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 

வேட்பாளர்கள் மீதான கிரிமினல் வழக்கு விவரங்களை வேட்பாளராக தேர்வு செய்த 2 வாரத்தில் கட்சி வெளியிட வேண்டும் என்று விதிகள் உள்ளன. அதை 48 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.


Next Story