பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்


பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்
x
தினத்தந்தி 12 Aug 2021 3:16 AM GMT (Updated: 12 Aug 2021 3:16 AM GMT)

பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடுகிறார்.

புதுடெல்லி,

பெண்கள் சுய உதவி உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு தற்சார்பு பெண்கள் அமைப்பினருடன் பிரதமர் மோடி இன்று மதியம் (12.30) மணியளவில் காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடுகிறார். அப்போது, 4 லட்சம் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1,625 கோடி நிதியை விடுவிக்கிறார். சுய உதவிக் குழுவினர் வெற்றிக் கதைகள் தொகுப்பையும் பிரதமர் வெளியிடுகிறார்.

இதில் தீன்தயாள் அந்தியோதயா திட்டம் - தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் கலந்து கொள்கின்றனர்.

மேலும் பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் 7,500 பேருக்கு ரூ.25 கோடியை முதலீட்டு பணமாகவும் மற்றும் ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்பட்ட 75 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ.4.13 கோடி நிதியையும் பிரதமர் விடுவிக்கிறார். 

மேற்கண்ட தகவலை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Next Story