டுவிட்டர் விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கம்


டுவிட்டர் விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கம்
x
தினத்தந்தி 12 Aug 2021 4:58 AM GMT (Updated: 12 Aug 2021 4:58 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

புதுடெல்லி

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ  டுவிட்டர் கணக்கு  முடக்கப்பட்டு உள்ளதாக  அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

இதுகுறித்து காங்கிரசின் அதிகாரப்பூர்வ  பேஸ்புக்கில் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கின்  முகப்பு பக்கத்தை பதிவிட்டு தங்களது கணக்கு முடக்கப்பட்டு உள்ளதாக கூறி உள்ளது.

அந்த முகப்பு பக்கத்தில் இந்த கணக்கு டுவிட்டர் விதிகளை மீறியது என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம், என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

 ராகுல் காந்தி, மாணிக்தாக்கூர் எம்.பி. ஆகியோரின் டுவிட்டர் கணக்குகள் ஏற்கனவே  முடக்கப்பட்டு இருந்தன.


Next Story