நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 52.89 கோடியை தாண்டியது


நாட்டில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை  52.89 கோடியை தாண்டியது
x
தினத்தந்தி 12 Aug 2021 4:29 PM GMT (Updated: 2021-08-12T21:59:54+05:30)

நாட்டில் இதுவரை 52.89 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாடு தொடர்ந்து கொரோனா 2-வது அலையை வீழ்த்தும் பாதையில் பயணித்து வருகிறது. தினசரி பாதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் செல்கிறது.  இந்தநிலையில் நாட்டில் இதுவரை 52.89 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று இரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 52.89 கோடிக்கும் அதிகமானோருக்கு (52,89,27,844) கொரோனா தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி, முக்கிய மைல்கல்லை கடந்துள்ளது.

50 லட்சத்திற்கும் அதிகமான (50,77,491) தடுப்பூசிகள் இன்று பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 18-44 வயது பிரிவில் இதுவரை 27,83,649 பயனாளிகள் தங்களது முதல் தவணை தடுப்பூசியையும், 4,85,193 பயனாளிகள் தங்களது இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டனர்.

மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மராட்டியம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 5  மாநிலங்கள் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை 18-44 வயது பிரிவினருக்கு இது வரை செலுத்தியுள்ளன.

நாட்டில் இதுவரை மொத்தம் 41,10,68,420 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 11,78,59,424 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மட்டும் 1,06,12,965 பேர் முதல் தவணை தடுப்பூசியையும், 8,34,322 நபர்கள் இரண்டாம் தவணை இதுவரை செலுத்திக் கொண்டுள்ளனர் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story