பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் - நிதின் கட்காரி தகவல்


பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் - நிதின் கட்காரி தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2021 7:22 PM GMT (Updated: 2021-08-13T00:52:41+05:30)

பெங்களூரு-மைசூரு 10 வழிச்சாலை பணிகள் அடுத்த ஆண்டு நிறைவடையும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை திட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெங்களூரு கெங்கேரியில் இருந்து மைசூரு கொலம்பியா மருத்துவமனை வரை இந்த 10 வழி சாலை அமைக்கப்படுகிறது. 135 கிலோ மீட்டர் நீளத்திற்கு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் மதிப்பீடு ரூ.7,400 கோடி ஆகும். இதுகுறித்து மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

பாரத்மாலா திட்டத்தின் கீழ் பெங்களூரு-மைசூரு இடையே 10 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த திட்ட பணிகள் அடுத்த ஆண்டு (2022) அக்டோபர் மாதம் நிறைவடையும். இந்த பணிகள் நிறைவடைந்து போக்குவரத்து தொடங்கப்பட்டால், இந்த 2 நகரங்களுக்கு இடையே பயணம் நேரம் 90 நிமிடங்கள் வரை குறையும். தற்போது அது 4 வழி சாலையாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததை அடுத்து இந்த 10 வழி சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இவ்வாறு நிதின் கட்காரி குறிப்பிட்டுள்ளார்.

Next Story