ராகுல் காந்தியின் இன்ஸ்டகிராம் வீடியோ பதிவை நீக்க வேண்டும்; பேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம்


ராகுல் காந்தியின் இன்ஸ்டகிராம் வீடியோ பதிவை நீக்க வேண்டும்; பேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம்
x
தினத்தந்தி 13 Aug 2021 9:04 AM GMT (Updated: 13 Aug 2021 9:04 AM GMT)

தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் பேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி ராகுல் காந்தி இன்ஸ்டகிராமில் வெளியிட்ட வீடியோ பதிவை நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டார். அதனால் அவரது பக்கத்தை ‘டுவிட்டர்’ நிறுவனம் முடக்கியது. இதைத்தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. டுவிட்டரின் இந்த நடவடிக்கையை மிகக்கடுமையாக ராகுல் காந்தி விமர்சித்து இன்று வீடியோ பதிவு ஒன்றை ராகுல் காந்தி வெளியிட்டார். 

இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் பேஸ்புக் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி ராகுல் காந்தி இன்ஸ்டகிராமில் வெளியிட்ட வீடியோ பதிவை நீக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து எழுதப்பட்ட கடிதத்தில், 

ராகுல் காந்தி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளார். இதில் பெற்றோரின் முகம், அடையாளம் மறைக்கப்படாமல் தெளிவாகத் தெரிகிறது. எனவே, இந்த பதிவை நீக்குவதோடு ராகுல் காந்தியின் கணக்குக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story