சுதந்திர தினம்: மேற்கு வங்காள ரெயில்வே நிலையத்தில் மோப்ப நாய் சோதனை


சுதந்திர தினம்:  மேற்கு வங்காள ரெயில்வே நிலையத்தில் மோப்ப நாய் சோதனை
x
தினத்தந்தி 13 Aug 2021 9:23 PM GMT (Updated: 2021-08-14T02:53:19+05:30)

நாட்டின் சுதந்திர தினத்தினை முன்னிட்டு மேற்கு வங்காளத்தில் ரெயில்வே நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கொல்கத்தா,

நாடு முழுவதும் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது.  உளவு துறை எச்சரிக்கையை முன்னிட்டு டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் ரெயில்வே நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.  பயணிகளின் உடமைகள், லக்கேஜ்கள் உள்ளிட்டவற்றை போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

இதற்காக ரெயில்வே நிலையத்தில் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு பல்வேறு நிலையங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதுபற்றி ரெயில்வே போலீஸ் படை அதிகாரி சஞ்சீவ் சஹா கூறும்போது, எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.  பயணிகள் அச்சப்பட வேண்டாம்.  ஆனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்து உள்ளார்.


Next Story