அரியானா மாநில அரசு சார்பில் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசு


அரியானா மாநில அரசு சார்பில் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசு
x
தினத்தந்தி 14 Aug 2021 12:21 AM GMT (Updated: 2021-08-14T05:51:53+05:30)

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு அரியானா மாநில அரசு சார்பில் ரூ.6 கோடி பரிசு வழங்கப்பட்டது.

அரியானா, 

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தி வரலாறு படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசாக வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்திருந்தது. நேற்று நடந்த பாராட்டு விழாவில் ரூ.6 கோடிக்கான காசோலையை அரியானா கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா வழங்கினார். 

நீரஜ் சோப்ராவினால் விழாவில் கலந்து கொள்ள இயலாததால் அவரது சார்பில் அவரது மாமா பரிசுத்தொகையை பெற்றுக் கொண்டார். இதே போல் வெள்ளிப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவிகுமார், வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா முறையே ரூ.4 கோடி, ரூ.2½ கோடி வீதம் பெற்றுக்கொண்டனர்.

Next Story