மராட்டியத்தில் டெல்டா பிளஸ் பாதிப்பு எண்ணிக்கை 66-ஆக உயர்வு


மராட்டியத்தில் டெல்டா பிளஸ் பாதிப்பு எண்ணிக்கை 66-ஆக உயர்வு
x
தினத்தந்தி 14 Aug 2021 6:42 AM GMT (Updated: 2021-08-14T12:12:12+05:30)

மராட்டியத்தில் டெல்டா பிளஸ் பாதிப்பு எண்ணிக்கை 66-ஆக உயர்ந்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 6 ஆயிரத்து 686 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 5 ஆயிரத்து 861 பேர் குணமடைந்தனர். மாநிலத்தில் இதுவரை 63 லட்சத்து 82 ஆயிரத்து 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதில் 61 லட்சத்து 80 ஆயிரத்து 871 பேர் குணமாகி உள்ளனர். தற்போது மாநிலத்தில் 63 ஆயிரத்து 4 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல மேலும் 158 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். தொற்றுக்கு மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 730 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மும்பையில் புதிதாக 285 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 4 பேர் பலியானார்கள். நகரில் இதுவரை 7 லட்சத்து 38 ஆயிரத்து 807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கிடையே டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மராட்டியத்தில் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. 

தானே நகரில் ஒருவருக்கு நேற்று டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலம் டெல்டா பிளஸ் பாதிப்பு எண்ணிக்கை 66- ஆக உயர்ந்துள்ளது. டெல்டா பிளஸ் பாதிப்பால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். 


Next Story