தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பங்களா ரூ.52 கோடிக்கு விற்பனை


தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பங்களா ரூ.52 கோடிக்கு விற்பனை
x
தினத்தந்தி 14 Aug 2021 1:04 PM GMT (Updated: 2021-08-14T18:34:34+05:30)

தொழிலதிபர் விஜய் மல்லையாவின் பங்களா ரூ.52 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்

தொழில் அதிபர் விஜய் மல்லையா, நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளிடம் இருந்து பல்லாயிரம் கோடி கடன்களைப் பெற்று விட்டு, வட்டியுடன் திரும்பச்செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி ஓடி விட்டார்.அவரை இந்தியாவிற்கு நாடு கடத்தி கொண்டு வர மத்திய அரசு முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் சிறை சரியில்லை. கழிவறை சரியில்லை என்று ஏதேதோ காரணங்களை கூறி இந்தியா வருவதை மல்லையா தவிர்த்து வருகிறார். இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

மும்பையில் கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக கிங் பிஷர் ஹவுஸ் செயல்பட்டு வந்தது. மும்பை விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் அந்த கட்டிடத்தை கடன் கொடுத்த வங்கிகள் கையகப்படுத்தி அதனை 2016-ம் ஆண்டில் இருந்து விற்பனை செய்ய முயன்றன.

ஆரம்பத்தில் இதனை 150 கோடி ரூபாயிக்கு விற்பனை செய்ய திட்டமிட்டனர். இதற்காக நடந்த ஏலத்தில் சொத்து விற்பனையாகவில்லை. அதன் பிறகு பல முறை இந்த சொத்தின் மதிப்பை குறைத்து காட்டி விற்பனை செய்ய முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. தற்போது நீண்ட இழுபறிக்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து வெறும் 52 கோடி ரூபாயிக்கு கிங் பிஷர் ஹவுஸ் விற்பனையாகி இருக்கிறது. 

 கிங் பிஷர் ஹவுஸை ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு  ரூ .52 கோடிக்கு வங்கி உள்ளது.

கடந்த ஜூலை 26-ம் தேதி இங்கிலாந்து நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான சொத்துக்களை அவர் வாங்கிய கடனுக்காக உலகம் முழுவதும் முடக்கலாம் என்று இந்திய வங்கிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதனால் மல்லையா உலகம் முழுவதும் வாங்கி போட்டியிருக்கும் சொத்துக்களை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைமையிலான கடன் கொடுத்த வங்கிகள் முடக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

Next Story