நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து


நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டம்; பிரதமர் மோடி வாழ்த்து
x
தினத்தந்தி 15 Aug 2021 1:21 AM GMT (Updated: 2021-08-15T06:51:26+05:30)

நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.


புதுடெல்லி,

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது.  இதனை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், சுதந்திர தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். 

ஆசாதி கா அம்ரித் மகோத்சவ ஆண்டில் நாட்டு மக்களுக்குள் புது சக்தி பாயட்டும்.  புது நினைவுகள் மலரட்டும்.  ஜெய்ஹிந்த்! என தெரிவித்து உள்ளார்.

டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின கொண்டாட்டங்களை தொடங்கி வைக்கிறார்.  அவர் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.


Next Story