மக்கள் தொகை பெருக்கத்தால் விவசாய நிலப்பரப்பு சுருங்கி வருகிறது- பிரதமர் மோடி


மக்கள் தொகை பெருக்கத்தால் விவசாய நிலப்பரப்பு சுருங்கி வருகிறது- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 15 Aug 2021 3:11 AM GMT (Updated: 15 Aug 2021 3:11 AM GMT)

இந்திய மண்ணில் விளைந்த பொருட்களுக்கு உலகம் முழுவதும் வரவேற்பு இருக்கிறது என பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் கூறினார்.

புதுடெல்லி,

நாட்டின் 75-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்த பின்பு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றி வருகிறார். பிரதமர் மோடியின் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
  • இந்தியாவில் ஒரு பகுதி கூட பின்தங்கிய பகுதியாக இருக்க கூடாது என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறோம்
  • ஒவ்வொரு ஏழைகளுக்கும் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.
  • கடந்த 2 ஆண்டுகளில் 4.5 கோடி குடும்பங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
  • கிராமங்களில் தரமான மருத்துவ வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • நாட்டின் வளர்ச்சியை வேகமடைய செய்ய  ‘கதி சக்தி’ திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
  • போர் விமானங்களை தயாரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளோம். 
  • நம்முடைய தயாரிப்புகள் தரமானதாக இருக்க வேண்டும். அதில் மட்டுமே நம் நாட்டின் பெருமை உள்ளது.
  • மக்கள் தொகை பெருக்கத்தால் விவசாய நிலப்பரப்பு சுருங்கி வருகிறது.
  • விவசாயத்தில் நமது விஞ்ஞானிகள் புதிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். 
  • சிறு விவசாயிகளை கருத்தில் கொண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. 
  • இந்தியா ஓரு காலத்தில் 8 பில்லியன் செல்போன்களை இறக்குமதி செய்தது தற்போது 3 பில்லியன் செல்போன்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம்.
  • வரிகளில் இருந்த பிரச்சினை நீக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டுள்ளன. 
  • கிராமங்களும் நகரங்களும் இணைந்து வளர்ச்சிக்காக பாடுபட்டு கொண்டிருக்கின்றன.

Next Story